2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

நியமனம் வழங்கி வைப்பு

Sudharshini   / 2016 ஜூன் 15 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மத்திய மாகாண விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய திணைக்களம் மற்றும் கால்நடை வைத்தியசாலைகளில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக, விவசாய போதனா ஆசிரியர்கள் 24 பேருக்கும் கால்நடை அபிவிருத்தி போதனா ஆசிரியர்கள் 09 பேருக்கும்  நியமனக் கடிதங்கள் இன்று (15) மத்திய மாகாண ஆளுநர் மாளிகையின் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

மத்திய மாகாண விவசாய இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண அமைச்சின் செயலாளர் ஆர்.கே.ரத்நாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .