Kogilavani / 2016 ஜூலை 28 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நுவரெலியா மாவட்ட சுகாதார துறையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும், நுவரெலியா ஆதார வைத்தியசாலை மற்றும் பெருந்தோட்டத்துறை சுகாதார நிலையங்கள், மகப்பேற்று நிலையங்கள் போன்றவற்றில் பல்வேறு குறைபாடுகள் நிலவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
'நுவரெலிய மாவட்ட தோட்டப்புற சுகாதார மற்றும் மகப்பேற்று நிலையங்களில், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான சுகநல பாதுகாப்பு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ மற்றும் தடுப்பு மருந்துகள் கடந்த சில மாதங்களாக வழங்கப்படாமலுள்ளன.
குறித்த தினங்களில் மருந்துகளை பெற்றுக்கொள்ள வரும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகள் உரிய நேரத்தில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாமல் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
அத்தோடு, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு பொதி, திரிபோஷா போன்ற சத்துணவுத் திட்டங்கள் பெருந்தோட்ட பகுதிகளில் முறையாக நடைமுறைப்படுத்த ப்படுவதில்லை. தாய்சேய் நலத் திட்டங்கள் உரியமுறையில் முன்னெடுக்கப்படாத அல்லது முற்றிலும் நிராகரிக்கப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது' என குறிப்பிட்டுள்ளார்.
'நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு மற்றும் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகைதரும் நோயாளர்கள் பெரும்பாலான மருந்துகளை, மருந்தகங்களில் பெற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
நுவரெலிய மாவட்ட சுகாதார திணைக்களத்தில் மருந்துக்கு தட்டுப்பாடுகள் இல்லை. நிர்வாக பிரச்சினையே இதற்கு காரணமென சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 'நுவரெலிய மாவட்ட சுகாதார துறையில் காணப்படும் இப்பிரச்சினைக்கு சுகாதார அமைச்சு உடனடியாக தீர்வை பெபெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் வேண்டுகோள் விடுக்கின்றார்.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026