Sudharshini / 2016 ஜூலை 24 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்
பொகவந்தலாவை பிளான்டேசன் நிர்வாகம், கெசல்கமுவ ஒயா ஆற்றை மறித்து நிர்மாணித்துவரும் நீர் மின் உற்பத்தி நிலையத்தின், நிர்மாண பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
நீர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் மண், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் வியாபார நடவடிக்கைக்கு விற்கப்படுவதால் இந்நிலையத்தின் நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
பொகவான தோட்ட பாலத்தருகில் நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளை தோட்ட நீர்வாகம் தனியார் கம்பனியொன்றுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையம் அமைக்கும் இடத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் மண், மாணிக்கக்கல் அகழ்வுக்காக சீனாகொலை தோட்ட பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்படுகின்றமை தொடர்பில் பணியாளர்கள் கம்பனி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்தே நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026