2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

நுவரெலியாவில் பாதைகள் முறையாக செப்பனிடப்படவில்லை : ஸ்ரீதரன்

Sudharshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பல மாவட்டங்களிலும் உள்ள பெருந்தெருக்கள் காபட் இடப்பட்டுள்ள போதும், நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலா வீதிகள்; இதுவரை புனரமைக்கப்படால் பழைய நிலையிலே காணப்படுவது விசனத்துக்குரிய விடயமாகும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 'நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட  பொகவந்தலாவை , சாமிமலை, மஸ்கெலியா, பத்தனை, டயகம உள்ளிட்ட பல தோட்டங்களின் பாதைகள் செப்பனிடப்படால் காணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் உள்ளனர். பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் உள்ளனர். ஆனால், யாரும் மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரியவில்லை.

இம்மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளிலுள்ள பாதைகள் இதுவரை முறையாக செப்பனிடப்படவில்லை. பாதைகள் பல புனரமைக்கப்படாத  நிலையிலுள்ளன. இதனால், பெருந்தோட்டப்பகுதி மக்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .