Yuganthini / 2017 ஜூன் 14 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
சாமிமலையிலிருந்து அக்கரப்பத்தனைக்கு, லொறியொன்றில் சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்பட்ட பசுக்களுடன் இருவரை, விசேட அதிரடிப்படையினர்,இன்றுக் காலை கைது செய்துள்ளனர்.
டிக்கோயா, நோர்வூட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்கு இடமான முறையில், நோர்வூட் லங்கா பகுதிக்கூடாக பயணித்த லொறியை வழிமறித்து சோதனை செய்த மஸ்கெலியா, நல்லதண்ணி விசேட அதரடிப்படையினர், அவ்விருவரையும் கைதுசெய்ததுடன், இரு பசுக்களை மீட்டுள்ளனர்.
லொறியில் பசுக்களை ஏற்றுவதற்காக, பசுவொன்றின் கால்கள் முறிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு கால்கள் முறிக்கப்பட்ட பசுவானது, அசைய முடியாதளவு பாதிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் லொறியுடன் நோர்வூட் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை, ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026