2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருளுடன் மூவர் கைது

Janu   / 2026 மார்ச் 03 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை பொலிஸாரால்  நக்கல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை (02) அன்று முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பின் போது  போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் உட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, டெங்வத்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2,480 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 24 வயதுடைய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 22 வயதுடைய இரு  இளைஞர்கள்  742 மில்லிகிராம் மற்றும் 80 மில்லிகிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மொத்தமாக 3,302 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களை  மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .