2025 மே 19, திங்கட்கிழமை

பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி விலைபோகாது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதிஸ்

 தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் எமது கூட்டணியும் பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் ஒருபோதும் விலைபோகாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

பொகவந்தலாவ லின்போட் தோட்டப் பகுதியில் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்திற்கு குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், நாடு தற்பொழுது எதிர்நோக்கியிருக்கின்ற பொருளாதார பிரச்சினையின் காரணமாக, நாட்டை மீட்டெடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும்.

மலையகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருந்தார்கள். மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்தார்கள். ஆனால் மலையகத்தில் எவ்வித அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ளாது ஒரு குருகிய நான்கு வருட காலப்பகுதியில் மலையகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரே தலைவர் பழனி திகாம்பரம் மாத்திரமே.

இதற்கு முன்பு இருந்த அரசாங்கமும் அமைச்சர்களும் இந்த வீடமைப்பு திட்டத்திற்கு குடிநீர் வசதிகளை பெற்றுகொடுத்திருக்கவேண்டும் . நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் வீடமைப்பு திட்டத்திற்கு அப்பால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் எவ்வித அபிவிருத்தி களையும் முன்னெடுக்கவில்லை என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X