Kogilavani / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை முதியங்கன பகுதியிலுள்ள அரச வங்கியில் பணியாற்றும் ஏழு உழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பதுளை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி ஊழியர்கள் அலுவலகப் பணி நிமித்தம் கொழும்பிலுள்ள தலைமைக் காரியாலத்துக்கு அண்மையில் சென்று வந்துள்ளனர் என்றும் தலைமைக் காரியாலயத்தில் பலருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் பதுளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேற்படி எழுவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் முதியங்கன வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் வங்கியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago