2026 ஜனவரி 21, புதன்கிழமை

பதுளையில் ம.ம.முவின் காரியாலயம் திறப்பு

Kogilavani   / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

மலையக மக்கள் முன்னணியின் பதுளை பகாரியாலயம், பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகிலுள்ள கட்டடத்தில், இன்று (25) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, பல்லேகட்டுவ, ஹாலிஎல, மடுல்சீமை, லுணுகலை போன்ற பிரதேசங்களின் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் முகமாகவே இக்காரியாலயம் திறக்கப்பட்டதாக, முன்னிணயின் உயர்பீடம் அறிவித்துள்ளது.

இந்நிகழ்வில் முன்னணியின் தலைவரும் நுரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன், முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர்.விஜயசந்திரன், பொதுச்செயலாளர் கே.சுப்ரமணியம், பிரதித்தலைவர் அ.லோரன்ஸ், நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட கவுன்சில் உறுப்பினர்கள், இளைஞரணி,மகளீர் அணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X