Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 29 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை செல்லும் பிரதான வீதி காபட் இட்டு புனரமைக்கப்பட்ட போதிலும் டெஸ்போட் , கிரிமிட்டி வழியாக உரிய போக்குவரத்து சேவை இடம்பெறாமையால், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
சேவையில் ஈடுபடும் சில பஸ்கள், பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்வதாகவும் இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலை செல்லமுடியாத நிலை உள்ளது.
இப் போக்குவரத்து பிரச்சினைத் தொடர்பில், நுவரெலியா பிரதேச சபை அபிவிருத்தி கூட்டம் , மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத நிலையில், 2017ஆம் ஆண்டு, நானுஓயா பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு புதிதாக நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டு, அதிகாரிகள் பலர் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவந்தனர்.
எனினும் கடந்த மாதங்களில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ,அனைத்து பஸ்களும் நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் செல்வதால் நானுஓயா - டெஸ்போட் வழியை பயன்படுத்தும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பேசப்பட்டதையடுத்து,
நுவரெலியா - தலவாக்கலை பிரதான சுற்று வீதியில் நேர அட்டவணைப்படி பஸ்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின் தலைவர் எஸ்.பி திசாநாயக்க கடிதம் மூலமாக நுவரெலியா தனியார் பஸ் அலுவலகத்துக்கு தெரிவித்தப்போதிலும் இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை .
39 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago
4 hours ago