2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பேராதனையில் ஆலங்கட்டி மழை; பல்லேகலையில் பலத்த காற்று

Editorial   / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, பேராதனை மற்றும் பல்லேகலை  ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (08) மாலை பெய்த பலத்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

மத்திய மாகாண சபை வளாகத்திற்கு அருகிலுள்ள வீதியில் நின்ற மூன்று பெரிய மரங்கள் கடும் காற்றினால் முறிந்து வீழ்ந்துள்ளன. இதன்போது, அவ்வீதியால் பயணித்த ஓட்​டோ ஒன்று பலத்த சேதமடைந்ததுடன், அதன் சாரதி காயமடைந்துள்ளார். அத்துடன், மற்றுமொரு தனியார் பஸ் ஒன்றும் சிறியளவில் சேதமடைந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் எவருக்கும் பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. வீதியில் முறிந்து வீழ்ந்த மரங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் இணைந்து ஈடுபட்டு, போக்குவரத்தைச் சீர்செய்துள்ளனர். மேலும், பலத்த காற்று காரணமாக இப்பகுதியிலுள்ள சில வீடுகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பேராதனைப் பகுதியில் பலத்த மழையுடன் சேர்த்து ஆலங்கட்டிகள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .