Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துநர் , பேருந்திலிருந்து விழுந்ததில் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் புதன்கிழமை (02) காலை இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா நகரிலிருந்து காலை 10.20 மணிக்குப் புறப்பட்டு கொழும்பு நோக்கிப் பயணித்த, அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்குச் சொந்தமான பேருந்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது, அதன் மிதிப்பலகையில் நின்றவாறு கடமையில் ஈடுபட்டிருந்த நடத்துநர், சாரதி திடீரென தடை (Brake) போட்டதன் காரணமாக நிலைகுலைந்து பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நடத்துநர் 'காமினி' என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் உடனடியாக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

3 minute ago
18 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
55 minute ago
2 hours ago