Editorial / 2021 மே 17 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)
பலாங்கொடை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அண்மைக் காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வீட்டுஉபயோகப் பொருட்கள், சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள், உடைகள், வாகனங்களின் உதிரிப்பாகங்கள் ஆகியன இவ்வாறு திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பஸ் வண்டிகள் முச்சக்கர வண்டிகள் ஆகியவற்றிலுள்ள உதிரிப்பாகங்கள் திருடப்படுவதாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப் பகுதியில் வசிக்கும் போதைக்கு அடிமையான இளைஞர்கள் பணத்தேவைக்காக இவ்வாறான திருட்டுச் சம்பவங்களி ல் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டப்படுறது.

இரவு நேரங்களில் நகர் காவல் படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்றபோதும் இப் போதைப் பிரியர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருவதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்விடயத்தில் பாதுகாப்பு பிரிவினர் மேலதிக அக்கறை காட்ட வேண்டும் என பாதிக்கப்படும் தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago