Editorial / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (26) தப்பிச் சென்றதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடியவர்கள் கொழும்பு- 5 ஐச் சேர்ந்த 37 வயதுடையவர் மற்றும் கொழும்பு 15, மட்டக்குளியவைச் சேர்ந்த ஒருவர்.
சிறைச்சாலையின் பேக்கரி பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த இரு கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026