Freelancer / 2022 டிசெம்பர் 02 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். கிருஸ்ணா
தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த பஸ்ஸில் கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தலவாக்கலையில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸில் ஆணொருவர் 65 ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிடுதற்காக வந்துள்ளார்.
இதன்போது குடாகம பகுதியில் வைத்து பெண்கள் மூவர் பஸ்ஸில் ஏறியுள்ளனர்.
இப்பெண்களில் ஒருவர் குறித்த ஆணுக்கு அருகில் நின்றதாகவும் சில மணி நேரத்தின் பின்னர் குறித்த ஆணின் பணப்பை காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அந்த ஆணுக்கு அருகில் இருந்த பெண் பணத்தை எடுத்ததாக கூறி அந்த ஆண் குறித்த பெண்ணை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த பெண்ணுடன் வந்த ஏனைய இருவரும் தலை தலைமறைவாகி உள்ளதாகத் தெரியவருகிறது.
அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவருடன் மேலும் இரண்டு பெண்கள் தொடர்பு பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதுடன் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருதாகவும் இதன்போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கைசெயின் மற்றும் பணமும் காணாமல் போயுள்ளதாகவும் குறித்த பெண்களே இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். R
21 minute ago
31 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
43 minute ago