Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 நவம்பர் 17 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன் பிரதான பஸ் தரிப்பிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதுடன், மழையுடனான காலநிலையின் போது, ஹட்டன் பிரதான பஸ் தரிப்பிடத்தில் அதிகம் நீர் தேங்கி நிற்பதாகவும் பஸ் தரிப்பிடத்தில் காணப்படும் பாரிய குழிகளிலேயே இவ்வாறு நீர் தேங்க நிற்பதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பல வருடங்காக பஸ் தரிப்பிடத்தில் இந்தக் குழிகள் காணப்படுவதாகவும் இதனால் மழைக்காலங்களில் மாணவர்கள் அதிகம் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், பஸ் தரிப்பிடத்தில் உள்ள வடிகான்களை முறையாக சுத்தம் செய்யாததால், இப்பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நுளம்பு தொல்லையும் அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்னர் தனியார் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில், மண் சரிந்து வடிகானில் அடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை மண் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படாததால் மழைக் காலங்களில், வௌ்ள நீர் பெருக்கெடுக்கின்றது. இதனால், கடும் சிரமம் ஏற்படுவதாகவும் சாரதிகளும் பயணிகளும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் ஹட்டன்- டிக்கோயா நகரசபையோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ கவனம் செலுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
7 minute ago
9 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 hours ago
15 Aug 2025