2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பஸ் தீக்கிரை

Kogilavani   / 2017 ஜூலை 23 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை-வெல்லவாய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக, மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மொனராகலையிலிருந்து மாரியகாவவுக்கு சேவையில் ஈடுபட்டு வந்த பஸ்ஸே, இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், பஸ் தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

தீ விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X