Editorial / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிகவும் சூட்சுமுமான முறையில் அலைபேசியை பாதணியில் வைத்து, ஞாயிறு சந்தைக்கு வந்த பெண்ணை படம்பிடித்த இளைஞனை, எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, பலாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜயருவான் திஸாநாயக்க தெரிவித்தார்.
பலாங்கொடை புவக்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞர், நேற்று (6) முன்தினம் சந்தைக்கு வந்த பெண்ணொருவரை, மிகவும் சூட்சுமுமான முறையில் படம்பிடித்துள்ளார் என்றும் தெரியவருகிறது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, மேற்படி இளைஞனைக் கைதுசெய்த பொலிஸார், இளைஞனிடமிருந்து அலைபேசியைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இளைஞனின் அலைபேசியில் இவ்வாறான பல பெண்களின் புகைப்படங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. மேற்படி இளைஞனை நேற்று(7) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
16 minute ago
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
3 hours ago