Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சால் கொள்வனவு செய்யப்பட்டு, நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருக்கும் கூரைத் தகரங்கள், உரிய பயனாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று, நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
"முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பரிந்துரைக்கு அமைவாக, சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4,500 கூரைத்தகரங்கள், 1,500 பயனாளர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக கொள்வனவு செய்யப்பட்டன எனத் தெரிவித்தார்.
அதில் சுமார் 1,100 கூரைத்தகரங்கள், நாகசேனை, டீமலை தோட்ட மக்களின் லயன் கூரைகளைத் திருத்தி அமைப்பதற்கு என வழங்குவதற்கு, அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுமதி அளித்தார் என்றும் சுமார் 500 கூரைத் தகரங்கள் மட்டும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், தோட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதோடு மிகுதி 600 கூரைத் தகரங்கள், இன்னும் அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தேர்தலின் பின்னர், அந்தக் கூரைத் தகரங்களை ஏற்றிச்செல்ல வந்த லொறியைத் தடுத்து நிறுத்தி, கூரை தகரங்களை ஏற்றிச்செல்ல விடாது தடுத்தனர் என்றும் கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து கூரைத்தகரங்களையும் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், முன்னாள் அமைச்சரால் பகிர்ந்தளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
புதிதாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பொறுப்பெடுத்துள்ள தரப்பினர், குறித்த கூரைத்தகரங்களை உரிய பயனாளர்களுக்கு பகிர்ந்தளிக்காது, வேறு தரப்பினருக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று, பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் தெரிவிப்பதாகவும் ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்கள் பட்டியல், பிரதேச செயலாளர், தோட்ட அதிகாரி, கிராமசேவகர் ஆகியோரால் உறுதிபடுத்தப்பட்டதாகவும் குறித்த பெயர் பட்டியல், மனிதவள அபிவிருத்தித் தாபனத்திலும் அமைச்சிலும் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உரியத் தரப்பினர் இவ்விடயத்தைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலுக்கு ஏற்ப, கூரைத் தகரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு இருப்பதால், அந்தக் கூரைத்தகரங்களை அவர்களுக்கு வழங்குவதற்கு புதிய அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
26 minute ago
36 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
37 minute ago
43 minute ago