2026 மே 14, வியாழக்கிழமை

பிரதமரிடம் மகஜர் கொடுத்தார் சதாசிவம்

கு. புஷ்பராஜ்   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (03) சந்தித்து, மகஜரொன்றைக் கையளித்தார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் பெற்றுத்தருவதாக வழங்கிய வாக்குறுதிக்கமைய, அந்தச் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகஜரை ஏற்றுக்கொண்ட பிரதமர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடியதாகவும் இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அவர் சதாசிவம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .