Editorial / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்குள்ள பலம், பலவீனம் தொடர்பில் சுயவிமர்சனம் செய்துக்கொள்ள வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் காணப்படும் விரிசல் நிலைமை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இருவருக்கும் இடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே, எதிர்காலத்தில் அமையவுள்ள பொது கூட்டணித் தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணி சிந்திக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வெறுமனே உள்வீட்டுக்குள் உள்ள பிரச்சினைகளுக்கும் அதிகார பிரச்சினைகளுக்கும் தீர்வை பெறாமல், பொது கூட்டணியை அமைத்து மக்கள் மத்தியில் செல்வதில் எந்தவிதப் பிரயோசனமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பிரதமர் தன்னைப் பற்றிய முழு சுயவிமர்சனம் ஒன்றை செய்துக்கொள்வதே, தற்போதைய நிலைமையில் அத்தியாவசியமானது எனவும் அரவிந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார்.
மேலும் கோட்டாபயவை ஆதரிக்ககூடியக் களத்தை அவர் இதுவரை உருவாக்கவில்லை என்றும் அதேபோல் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி வெற்றி பெற போவதில்லை எனவும், அவர்களின் வாக்குபலம் வெறும் 5 இலட்சம் மாத்திரமே என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மொத்தத்தில் மலையக மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் ஒருவருக்கே, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவை வழங்கும் எனவும் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள புலனாய்வு துறையின் அசட்டைத்தனமே ஏப்ரல் குண்டு தாக்குதலுக்கு காரணம் எனவும் அவர் மேலும் கூறினார்.
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago