Niroshini / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
புசல்லாவை - கலுகல்ல தோட்டத்தில், இளம் குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக, புசல்லாவை - இரட்டைப் பாதை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
குறித்த நபர், தம்புள்ளை மரக்கறி மொத்த விற்பனை நிலையத்தில், தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 12ஆம் திகதியன்று, சித்திரை புத்தாண்டுக்காக, கலுகல தோட்டத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் மீண்டும் கடந்த 15ஆம் திகதியன்று தம்புள்ளைக்கு சென்றுள்ளபர்.
தம்புள்ளையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, 23ஆம் திகதியன்று, குறித்த நபர் தொழில்புரிந்த பகுதியில் உள்ள பலருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்போது, அவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி,சி,ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கலுகல்ல தோட்டத்துக்கு அவர் வந்து சென்ற காரணத்தால், அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரது பிள்ளைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் சுய தனிமைக்குட்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புசல்லாவை – இரட்டைப்பாதை, செல்வகந்தை பகுதியிலும், தொற்றாளர் ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.
கொழும்பில் தொழில்புரியும் அவர், கடந்த வாரம் அவரது சொந்த வசிப்பிடமான செல்வகந்தைக்கு வந்திருந்த நிலையில், அவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவருடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 30ஆம் திகதியன்று, இவர்களுக்கான பி,சி,ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago