2026 ஜனவரி 21, புதன்கிழமை

புத்தக அலுமாரி கையளிப்பு

Kogilavani   / 2021 மே 03 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

டிக்கோயா மணிக்கவத்தை 2ஆம் பிரிவிலுள்ள ஆத்ம ஜோதிஅறநெறி பாடசாலைக்கு, புத்தக அலுமாரி ஒன்றை, அகில இலங்கை மக்கள் முன்னேற்ற முன்னணி கையளித்துள்ளது.

மே தின கூட்டத்துக்காக செலவிடும் நிதியில் புத்தக அலுமாரி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முன்னேற்ற முன்னணி தலைவர் இளங்கோ காந்தி இதனை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இளங்கோ காந்தி, மலையகத்தில் அறநெறி பாடசாலைகளைக் கட்டாயப்படுத்தல் வேண்டும் என்றும் மாணவர்களுக்கு முன்பள்ளி எவ்வாறு முக்கியமானதோ அதேபோன்று அறநெறி பாடசாலைகளும் முக்கியமானது என்றார்.

இந்நிகழ்வில் முன்னணியின் நிதிச்செயலாளர் ராஜ் பிரசாத் உட்பட அறநெறி பாடசாலை நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X