Kogilavani / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியா இந்து கலாசாரப் பேரவையின் 30 ஆவது வருட நிறைவை முன்னிட்டு, நுவரெலியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில், பெற்றோரை இழந்த மாணவர், மாணவியருக்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர், மாணவியருக்கும் புலமைப்பரிசிலை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
விசேடமாக நுவரெலியா இந்து கலாசாரப் பேரவையின் ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலையில் கல்விகற்ற மாணவர், மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
புலமைப்பரிசிலைப் பெற தகுதியுடையவர்கள், எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், நுவரெலியா இந்து கலாசாரப் பேரவை, இலக்கம் 30 கண்டி வீதி, நுவரெலியா என்ற முகவரிக்கு, முழு விவரங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகப் பரீட்சை, எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு, நுவரெலியா பொதுநூலகக் கேட்போர் கூடத்தில், நுவரெலியா இந்து கலாசார பேரவையின் தலைவரும் நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இரா.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை, 077-3179138 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
21 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 Jan 2026
21 Jan 2026