2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

புலியொன்று சடலமாக மீட்பு

Editorial   / 2022 பெப்ரவரி 25 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நோட்டன் பிரிட்ஜ்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிட்போட் பகுதியில் தனியார் தோட்டப்பகுதியிலிருந்து இறந்து கிடந்த புலியொன்று இன்று (25) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

 தொழிலுக்குச் சென்றவர்களால் புலியின் சடலமொன்று கிடப்பது தொடர்பில், பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து,  நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொலிஸார் தகவல் கொடுத்தனர்.  அந்த புலியின் சடலம் ரந்தனிகலவில் உள்ள வனவிலங்கு வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண்  புலியின் சடலத்தில் காயங்கள் இருப்பதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X