Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 18 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதி, கலப்பிட்டிய வீரசேகரபுர பகுதியில், பிரதேச மக்கள், இன்று (18) காலை முதல் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, அவ்வீதி வழியான போக்குவரத்து முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதி, கலப்பிட்டிய சந்தியிலிருந்து ஹரங்கல சந்தி வரையுள்ள சுமார் ஒன்பது கிலோமீற்றர் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரியே, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியில், டயர்களை எரித்தம் கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவண்ணமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மதகுருமார்களும் பங்கேற்றுள்ளனர்.
கலப்பிட்டிய சந்தியிலிருந்து, ஹரங்கல சந்தி வரையுள்ள சுமார் ஒன்பது கிலோமீற்றர் தூரமுடைய பிரதான வீதியை, காபட் வீதியாக செப்பணிட்டுத் தருமாறு, பல முறை அரசியல்வாதிகளிடமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தெரிவித்தும், இதுவரை எவ்விதத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்று, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, அரசியல்வாதிகளின் அசமந்தப் போக்கைக் கண்டித்தும் உடனடியாக வீதியைப் புனரமைத்துத் தருமாறும் கோரியே, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago