Janu / 2024 நவம்பர் 12 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெந்திக்கும்புர, அந்தாயம்பொலை பிரதேசத்தில் வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயை வன்புணர்வதற்கு முயன்ற ஒருவரை தேடி, வலைவிரித்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் கணவன், கொழும்பு பிரதேசத்தில் வேலைச்செய்துவருகின்றார். தன்னுடைய பிள்ளைகள் இருவருடன், அயலில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்றிருந்த அப்பெண், அன்றிரவு 10 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
கட்டிலில் படுக்கச்சென்ற அப்பெண், கட்டிலுக்கு அருகில் உள்ள நாட்காலியில் யாரோ ஒருவர் அமர்ந்திருப்பதை அவதானித்தார்.
அச்சமடைந்த அந்த பெண், கூச்சலிடமுயன்றபோது, பாய்ந்துபிடித்த அந்தநபர், அப்பெண்ணின் வாயை பொத்தி, கழுத்தை நெரித்து, சத்தம்போட்டால், கொலைச்செய்துவிடுவேன் என அச்சுறுத்தி, பாலியல் வன்புணர்ந்துள்ளார்.
ஏதோவிபரீதம் இடம்பெறுவதை அறிந்த அப்பெண்ணின் மகன், பக்கத்து அறையில் இருந்து தும்புத்தடியை எடுத்துவந்து தாக்குவதற்கு முயன்றபோது, பின்கதவால் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
அந்த மர்ம நபர், பூப்புனித நீராட்டு விழாவுக்கு வருகைதந்தவர் என்பது இனங்காணப்பட்டுள்ளது என்று தெரிவித்த மொனராகலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
33 minute ago
44 minute ago
47 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
44 minute ago
47 minute ago
54 minute ago