R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றதா என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பினார்.
வெளிக் காவலாளிகளை தோட்ட தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு சேவையில் அமர்த்துவதற்கு தோட்ட நிர்வாகம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம்
மடூல்சீமை - மஹதோவ தோட்ட தொழிலாளர்கள் மஹதோவ தொழிற்சாலைக்கு முன்பாக நேற்று (22) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,.
இது ஆரம்பம் அல்ல. பெருந்தோட்ட நிர்வாகங்கள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை தோட்ட தொழிற்சாலைகளில் பாதுகாவலராக நியமிப்பதற்கு எத்தனிக்கின்றனர்.
இதற்கு காரணம் என்ன ?மறைமுகமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் தோட்ட நிர்வாகம் ஈடுபடுகின்றதா?
இலாப நோக்குடன் செயல்படும் பெருந்தோட்ட நிர்வாகங்கள், இலாபத்திற்கு காரணமான தொழிலாளர்களைப் பற்றி துளியேனும் சிந்திப்பதில்லை. அவர்களுடைய மிலேச்சத்தனமான நடவடிக்கைகளினால் பல தொழிலாளர்கள் பெருந்தோட்டத்துறையைத் துறந்து, வேறு வேலைகளுக்கு செல்லும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அந்நிய செலாவணியை நாட்டிற்கு ஈட்டு கொடுப்பதில் பாரிய பங்குதாரர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களே. இருப்பினும் மனிதாபிமானமற்ற ரீதியில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
தொடர்ந்தும் தன்னிச்சையாக பெருந்தோட்ட நிர்வாகங்கள் செயற்பட்டால் பாரியதொரு தொழிற்சங்க போராட்டத்திற்க்கு முகம் கொடுக்க நேரிடும் என்றார்.
8 minute ago
17 minute ago
44 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
44 minute ago
20 Dec 2025