Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
R.Maheshwary / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
பேராதனைப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிடுவதற்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு அமைய, இன்றும் (1) நேற்றும் (30) அதிகளவான மாணவர்கள் நாடுபூராகவும் இருந்து வருகைத் தந்திருந்தனர்.
இதற்கமைய 28 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 4,500 மாணவர்கள் வருகைத் தந்திருந்தனர் என பேராதனைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைக்கால வரலாற்றில் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு இவ்வளவு மாணவர்கள் வருகை தந்ததில்லை எனத் தெரிவித்த பேராதனை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் அபேவிக்ரம, மாத்தறை, வலஸ்முல்ல, காலி, இரத்தினபுரி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்துக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வளவு தொகையான மாணவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை ஒரே நேரத்தில் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் கடினமான பணியாக இருந்ததாக தெரிவித்தார்.
ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாகக் கருதப்படும் பேராதனைப் பல்கலைக்கழக நூலகம், விளையாட்டுக் கூடம் உள்ளிட்ட பல இடங்களைப் பார்வையிடுவதற்கு மாணவர்களின் பெரும் ஆர்வமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
5 hours ago