Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொகவந்தலாவை நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களால், இன்று (15) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மஸ்கெலியா, கொட்டகலை, லிந்துல, கொத்மலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுகாதார வைத்திய அலுவலகத்தின் கீழ் கடமையாற்றும் 25 சுகாதார பரிசோதகர்களால், இந்தப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய பொகவந்தலாவை நகரிலுள்ள ஹோட்டல்கள், வெதுப்பகம், மொத்த, சில்லறை வர்த்தக நிலையங்கள், பல்பொருள் அங்காடி என்பன சோதனையிடப்பட்டதுடன், இதன்போது, சுகாதாரமற்ற முறையில் ஹோட்டல்களை நடத்திச் சென்றமை, புழுக்களுடனான அரிசி விற்பனை, விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், 20 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக, பொகவந்தலாவை பொதுச் சுகாதார பரிசோதகர் கே.ஜே. கணேசன் தெரிவித்தார்.
மேலும் உரிய முறையில் பொருள்களைக் களஞ்சியப்படுத்தாமை உள்ளிட்ட குறைபாடுகள் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் 14 நாள்கள் காலக்கெடு வழங்கப்பட்டதுடன், குறித்த காலப்பகுதிக்குள், தமது வர்த்தக நிலையக் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு எதிராக, நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago