மொஹொமட் ஆஸிக் / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறணை பொதுச் சந்தைக் கட்டடத்தில், வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளின் புறத்தோற்றைத்தை மெருகூட்டிக்கொடுப்பதற்கும் சந்தைக் கட்டடத்துக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திகார் இமாதுதீன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் புதிய சுற்றுநிருப விதிமுறைகளுக்கமை, அக்குறணை சந்தைக் கட்டடத்திலுள்ள கடைகளுக்குரிய புதிய வாடகை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக, அக்குறணை பிரதேச சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிந்த நிகழ்வின்போதே, இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
வாடகைக் கடைகளில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் கோரிக்கைக்கு இணங்க, வர்த்தக நிலையத்தை நிர்வகித்தல், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், திண்மக்கழிவகற்றல் போன்றவற்றை முறையாக செயற்படுத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக, இதன்போது தவிசாளர் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago