Janu / 2025 ஜூன் 01 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவாய பொலிஸ் பிரிவின் கோன்வெலன பகுதிக்கு வெள்ளிக்கிழமை (30) சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவை சந்தேக நபர் ஒருவர் கத்தியால் தாக்க முயன்ற போது பொலிஸார் சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
உப பொலிஸ் பரிசோதகர் பிரேமசிறி உள்ளிட்ட அதிகாரிகள் குழு, முச்சக்கர வண்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளுக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்ய கோன்வெலன பகுதியில் உள்ள புது மெதுர சந்திக்குச் சென்றுள்ளனர்.
குறித்த இடத்தில் இருந்து சந்தேக நபரைக் கைது செய்யச் சென்ற போது, சந்தேக நபர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு, கத்தியால் பொலிஸ் அதிகாரிகளை தாக்க முயன்றுள்ளார்.
அவ்வாறு செய்ய வேண்டாம் என உப பொலிஸ் பரிசோதகர் கூறியபோதும் அவர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், சந்தேக நபரின் கால் மீது துப்பாக்கி சுடு நடத்தியுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து கத்தி, 2750 மில்லிகிராம் ஐஸ், 16 மில்லிகிராம் ஹெராயின், மக்கள் வங்கியில் இருந்து 29,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய்க்கான 02 ரசீதுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கூலி வேலையில் ஈடுபட்டு வரும் வெல்லவாய, மஹவெலமுல்ல கங்க வீதியைச் சேர்ந்த 37 வயதுடையவராவர்.
சந்தேக நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெல்லவாய நீதவான், சந்தேக நபரை வைத்தியசாலைக்கு வந்து பார்வையிட்டு ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025