R.Tharaniya / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை இல்லவதுர பகுதியில் போதைபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்த நபரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் காஞ்சனா கொடித்துவக்கு உத்தரவிட்டார்.
கம்பளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எரிக் பெரேராவுக்கு, இல்லவதுர பகுதியில் சிறிது காலமாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்து உள்ளது
அதன்படி, ஊழல் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மஹாகெதர உள்ளிட்ட குழுவினர் அந்த நபரின் வீட்டை சோதனை செய்ததில், அவரிடம் இருந்து 2,868 கிராம் ஹெராயின் மற்றும் 1022 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு சிறிய லொறியையும் சோதனை செய்தபோது, உள்ளே இரண்டு இரும்பு முனை கத்திகள், இரண்டு சைக்கிள் சங்கிலிகள், ஒரு வாள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நாற்பத்தொரு வயது நபர் தனது 21 வயது காதலியுடன் இருந்தபோது காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன்படி போதைப்பொருள், லொறி மற்றும் ஆயுதங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நவி
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago