R.Maheshwary / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
போதைப் பொருள்களுடன் நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற நான்கு இளைஞர்களும் சட்டவிரோதமாக வல்லப்பட்டையைக் கொண்டுச் சென்ற மற்றுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (4) மாலை ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை- களுகல பொலிஸ் காவலரண் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே,சந்தேகநபர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஜி.ரஞ்சன் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட 4 சந்தேகநபர்களிடமிருந்து கேளா கஞ்சா, போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் மேலும் சிலருடன் தனியார் பஸ்ஸொன்றில் நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபர்கள் நால்வரும் 20- 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், இவர்கள் அவிசாவளை மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கினிகத்தேனை பகுதியிலிருந்து தெரணியகல பகுதிக்கு அனுமதியின்றி 2 கிலோ 3 கிராம் வல்லப்பட்டையைக் கொண்டுச் சென்ற நபர் ஒருவரும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் ஐவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
37 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
37 minute ago
41 minute ago
47 minute ago