Janu / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சில நபர்கள் வர்த்தக நிலையங்களில் பணம் சேகரிப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இவ்வாறான நபர்கள் குறித்து மிக கவனமாக இருக்கும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில நகரங்களில் சில தனி நபர்கள் இவ்வாறு மோசடியான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது ஒவ்வொரு வர்த்தக நிலையங்களுக்கும் சென்று சுமார் 2000 ரூபாய் அரவிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும் பல வர்த்தக நிலையங்கள் குறித்த நபருக்கு பணம் வழங்கவில்லை என அறியமுடிகிறதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவுகளுக்கு மத்தியில் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் குறித்த தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத நிலையை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பணம் வசூலிப்பதாக தெரியவருகிறது.
2 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
9 hours ago