Sudharshini / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. இராமசந்திரன்
புகைப்பட கலை என்பது இதயத்தோடு தொடர்புடைய ஒன்று. அதை இரசனையுடன் மேற்கொள்ளும் போதே சிறந்த பயனை பெறமுடியும் என புகைப்பட கலைஞர் ஹர்ஷ மதுரரங்க ஜயசேகர தெரிவித்தார்.
மலையக புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.இராமதாஸ் தலைமையில், இலவச டிஜிட்டல் புகைப்பட பயிற்சி பட்டறை ஹட்டன், கிருஸ்னபவன் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் புகைப்படத்துறையின் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
அதே போன்று மலையகத்திலும் இத்துறை வளர்ச்சியடை வேண்டும். மலையகத்தில் புகைப்படகலைத்துறையில் அதிகளவு ஆர்வமுள்ளவர்கள் காணப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கு சிறந்த பயிற்களை வழங்கும் போது, அவர்களையும் சிறந்த புகைப்பட கலைஞர்களாக சமூகத்தில் கொண்டுவர முடியும்' என்றார்.
இந்நிகழ்வில், மூத்த புகைப்படகலைஞர் விஜயகுமார் மற்றும் ஹட்டன், நுவரெலியா, கம்பளை மற்றும் கண்டி உட்பட பல பகுதிகளிலிருந்து 80க்கும் மேற்பட புகைப்படகலைஞர்கள் கலந்துகொண்டனர் .
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago