Gavitha / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தனை, மவுண்வேர்ணன் தோட்டத்தில், 2011ஆம் ஆண்டு மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 39 குடும்பங்களுக்கும், பாதுகாப்பான பகுதிகளில் வீடுகளை அமைத்து அவர்களை மீள்குடியேற்ற, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இ.தொ.கா.வின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'2011ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் பெரும்பாலான குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டன. மேலும், சில குடியிருப்புக்கள் வெள்ளத்தால் அடித்தும் செல்லப்பட்டுள்ளன. ஆனால், இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எவ்வித உதவிகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. தோட்ட நிர்வாகங்களும் ஏனோ, தானோ என்ற போக்கை கடைப்பிடிக்கின்றன.
அந்த வகையில், மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் 39 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு எந்த விதமான நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை. இத்தகைய தருணத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பாதிப்புக்குள்ளான குறித்த குடும்பங்களுக்குப் புதிய வீடமைப்புத் திட்டத்தில் குடியிருப்புகளை அமைத்து அவர்களை அங்கே குடியமர்த்த முன்வர வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குடியிருப்புக்கள் அமைப்பதற்கான இடவசதிகள் தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
10 Apr 2026