2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

பௌத்தத்துக்கு முன்னுரிமை

Kogilavani   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பௌத்த மதத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி, அதற்கு முன்னுரிமையும் வழங்கப்படும் என்று  கூறினார்.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை, சனிக்கிழமை (13) சந்தித்த பிரதமர், மகாநாயக்க தேரர்களது ஆலோசனையின் அடிப்படையிலேயே, பௌத்த மதகுருமார் தொடர்பான சட்டமூலங்களை தயாரிக்க உள்ளதாக உறுதியளித்தார்.

பௌத்த பிக்குகள் தொடர்பான சட்ட மூலத்தை மகாநாயக்க தேரர்களது, 'சங்க' சபைகளின் தேவையின் அடிப்படையிலே முன் எடுக்கப்படும் என, மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் கலகம ஸ்ரீ அத்த தஸ்சி தேரர் ஆகியோர்களைச் சந்தித்து நல்லாசி பெற்ற போது குறிப்பிட்டார்.

தேசிய அபிவிருத்திகளைத் திட்டமிடும் போது அந்தந்த பிரதேச அமைச்சர்கள், மகாணசபை அங்கத்தவர்கள், முதலமைச்சர்கள், போன்ற மக்கள் பிரதிநிதிகளின் குழுவொன்றை உருவாக்கி, அதன் மூலம் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கலந்துரையாடி இறுதி அறிக்கைபெற திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .