Sudharshini / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அலவத்துகொடை பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற போலி தகவல் ஒன்றினால், பொலிஸார் பல மணிநேரம் அப்பகுதியில் தேடுதல் நடத்திய சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
அக்குறணை நகரில் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பற்றியுள்ளதாக, அலவத்துகொடை பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பு ஒன்றுக்கு அமைய, அப்பகுதி முழுவதும் பல மணிநேரம் பொலிஸார் தேடுதல் நடத்தினர்.
எனினும் அவ்வாறு ஒரு வர்த்தக நிலையம் தீப்பிடித்து எரிந்தமைக்கான எவ்வித தடயங்களும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.
அக்குறணை நகரில் சியா வைத்தியசாலை மற்றும் அக்குறணை 7ஆம் கட்டையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை என்ற இரண்டு வைத்தியசாலைகள் மட்டுமே உள்ளன. இவ்விரு வைத்தியசாலைகளுக்கும் அருகே உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும்; விசாரித்த போதும், அவ்வாறு எந்த ஒரு வர்த்தக நிலையமும் தீப்பற்றி எரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு தமக்கு கிடைக்கப்பெற்றது போலியான தகவல் என பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. அவசர தொலைபேசி இலக்கங்களானது, மக்களின் நலன் கருதி அவசர தேவைகளின் போது உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக அரசினால் அறிமுகம் செய்யப்பட்டவையாகும்.
அவ்வாறு இருக்க அச்சேவையை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதால் சில சமயங்களில் அவசர தேவைகளின் போது மேற்கொள்ளப்படும் அழைப்புகள் கூட நிராகரிக்கபட கூடிய வாய்ப்புள்ளது.
எனவே, அரசினால் வழங்கப்பட்டுள்ள அவ்வாறான பொதுச்சேவைகளை சரியாக பயன்படுத்திப் பயன்பெற முயற்சிக்க வேண்டுமென பொலிஸார் கூறிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago