Sudharshini / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
தலவாக்கலை, ட்றூப் தோட்டத்தில் பாவனைக்குதவாத கோதுமை மாவை விநியோகம் செய்த தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் உட்பட நால்வரையும் தலா 3,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் காரியவசம், வியாழக்கிழமை (08) உத்தரவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை (02) 1,550 கிலோ பாவனைக்குதவாத கோதுமை மா பக்கற்றுக்களை தலவாக்கலை, வட்டக்கொடை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நரேந்திரன் கைப்பற்றி அவற்றுக்கு சீல் வைத்ததோடு, அப்பொதிகளை கொள்வனவு செய்து விநியோகித்த உத்தியோகத்தர், அத்தோட்டத்தில் பொருட்கள் விநியோகிக்கும் உத்தியோகத்தர், தலைமை வெளிக்கள உத்தியோகத்தர் மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை விநியோகிக்க வேண்டுமென நீதவான் எச்சரிக்கை விடுத்தார்.
20 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
2 hours ago