எம். செல்வராஜா / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எட்டு வயது நிரம்பிய தனது மகனை மரமொன்றில் கட்டி வைத்து துன்புறுத்திய தந்தையை, மொனராகலை பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர்.
மொனராகலை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், மரத்தில் கட்டியிருந்த சிறுவனை மீட்டதுடன், சிறுவனின் தந்தையையும் கைது செய்துள்ளனர்.
மொனராகலைப் பகுதியின் அலியாவத்தை தோட்டத்திலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துன்புறுத்தப்பட்ட சிறுவன், மொனராகலை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago