Niroshini / 2016 மார்ச் 04 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
தலவாக்கலை பிரதேசத்தில் 9 வயது மகனின் கழுத்தில் சூடு வைத்த தந்தையொருவரை, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.ஆர்.டி.இந்திக்க உத்தரவிட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா தோட்டத்தில் தந்தையொருவர் குடிபோதையில் தனது மகனின் கழுத்தில் சூடு வைத்துள்ளார்.
இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் குறித்த நபரை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளான சிறுவன் தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago