2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 14 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலையில் இருந்து  ஹட்டன் நோக்கியும், ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கியும் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கொட்டகலை எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அதிக வேகத்துடன் சென்று நேருக்கு நேர் மோதியதில் செவ்வாய்க்கிழமை (14) அன்று  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இருவர் மற்றும் பாடசாலை ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவது ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மறு திசையில்  பயணித்த முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது,எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இவ்விபத்து குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X