Editorial / 2020 ஜூன் 22 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி, மடுல்கலை நகரத்தில், இதுவரை காலமும் மலசலக்கூடமொன்று அமைக்கப்படாதமையால், மக்கள் பாரிய அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தோட்டப்புறங்கள், தோட்டப்புறங்களைச் சேர்ந்த 30,000 பேர் வரை, தங்களது அன்றாட நடவடிக்கைகளுக்காக, மடுல்கலை நகரத்துக்கே வந்து செல்கின்றனர்.
இந்த நகரிலேயே, மாவட்ட வைத்தியசாலையும் காணப்படுகின்ற நிலையில், மருத்துவத் தேவைக்காக வருவோரும் அசௌகரியத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நகரில், 40க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படும் நிலையில், இதில் தொழில் புரியும் இளைஞர், யுவதிகளும் மலசலக்கூடம் இல்லாத பிரச்சினைக்கே முகங்கொடுத்துள்ளனர்.
மலசலக்கூடம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான இடமொன்று இன்மையே இதற்குக் காரணம் என, பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்து வருவதாகவும் எது எவ்வாறாக இருப்பினும், பொதுநல சேவைகளை நிறைவேற்றுவதே, மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026