Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 ஜனவரி 24 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே. குமார்
நுவரெலியா -பதுளை பிரதான வீதியில் இன்று (24) காலை இடம்பெற்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும் மார்காஸ்தோட்ட பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, மட்டக்குதிரை ஒன்று மோட்டார்சைக்கிளில் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக நுவரெலியா-கண்டி , நுவரெலியா - உடப்புசல்லாவ, நுவரெலியா - பதுளை போன்ற வீதிகளில் அதிகமான வாகனங்கள் தினமும் பயணிக்கும் நிலையில், இந்த வீதியில் 30க்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகள் கட்டுபாடின்றி தினமும் சுற்றித்திரிவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்குதிரைகள் போக்கு வரத்துக்கு இடையூறாக வீதியில் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன . இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் , அல்லது மட்டக்குதிரை வளர்ப்போருக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி , அதையும் மீறும் பட்சத்தில் மட்டக்குதிரையை பறிமுதல் செய்து அதிகரித்த தண்டப்பணத்தை விதிக்க நுவரெலியா மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொது மக்களும் வாகன சாரதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
47 minute ago
51 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
8 hours ago