2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மணலுடன் வீதியில் குடைசாய்ந்த லொறி

Janu   / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று நானுஒயா டெஸ்போட் பகுதியில்  விபத்துக்குள்ளாகி குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மஹியாங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலைக்கு மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்றே திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தினால் நுவரெலியா - தலவாக்கலை ஏ - 7 பிரதான வீதியின் போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது. எனினும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் உடனடியாக வீதியில் கொட்டிய மணல்களை அகற்றி  போக்குவரத்தினை வழமைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. 

விபத்தின் போது லொறியின் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் , தெரிவிக்கப்படுகிறது.

செ.திவாகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X