Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
மாத்தளை, நாவுல நகர், கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மண்ணெண்ணெய் கலந்த எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக, வாகன சாரதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இளைஞரொருவர் பெற்றோலைக் கொள்வனவு செய்வதற்காக, மேற்படி நிலையத்துக்குச் சென்ற போது, போத்தலில் வழங்கப்பட்ட பெற்றோல், சிவப்பு நிறத்தில் காணப்பட்டதாகவும் அந்தப் போத்தலில் பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலந்த வாசம் வந்ததாகவும் அவ்விளைஞர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில், நாவுல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் குழுவொன்று, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் பணித்துள்ளது.
2 minute ago
5 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 minute ago
31 minute ago
37 minute ago