2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மண்மேடு சரிந்ததால் இளைஞர் உயிரிழப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பண்டாரவளை கல்வள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(23) மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் 31 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

பண்டாரவளை பூனாகல வீதி கல்வளப் பகுதியில்  புதிய வீடு நிர்மாணிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது  31 வயதான ஓரு பிள்ளையின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் மண்ணாகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த நபர் மீது பாரிய மண்மேடு சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

சக ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து  சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேல் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவ்வேளையி​லே அவர் உயிரிழந்து உள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த பண்டாரவளை பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு.  மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட உள்ளதாக பண்டாரவளை பொலிசார் தெரிவித்தனர். 

இராஜரத்தினம் சுரேஷ்குமார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X