2026 ஜனவரி 21, புதன்கிழமை

’மதுபானசாலைகளுக்குள் மது அருந்தக் கூடாது’

Kogilavani   / 2021 மே 12 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

பொதுசுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, மதுபானசாலைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதுத் தொடர்பில், மதுபானசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்தும் கூட்டம், தலவாக்கலை-லிந்துலை நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர் ருவான் சுமணசேகர தலைமையில், இன்று(12) நடைபெற்றது.

மதுபானசாலைகளில் பணியாற்றும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என்றும் வாடிக்கையாளர்களும் முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என்றும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் “குறைந்தபட்சம் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேண வேண்டும்”, “வாடிக்கையாளர்களை மதுபானசாலைக்குள் மது அருந்த அனுமதிக்கக் கூடாது” உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் இதன்போது வழங்கப்பட்டன.

இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர் என்றும் எதிர்காலத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மதுபான உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேற்படி அதிகாரி கடுமையாக எச்சரித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X