2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மதுபானசாலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சு.சுரேந்திரன்   

லுணுகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹொப்டன் 20ஆம் கட்டைப் பகுதியில் மீளத்திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை உடனடியாக மூடுமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள், லுணுகலை பிரதேச செயலகத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், இன்று (24) ஈடுபட்டனர்.

மேற்படி போராட்டத்தில், யப்பாம்மை விகாரையின் விகாராதிபதி மற்றும் லுணுகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

மதுபானசாலையானது ஒரு வருடத்துக்கு முன்பு மூடப்பட்ட நிலையிலேயே மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

மதுபானசாலை மீளத்திறக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மனுவொன்றையும் பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X